Published on 28/11/2021 | Edited on 28/11/2021
83- வது 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று (28/11/2021) காலை 11.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனா நம்மை விட்டு செல்லவில்லை என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது. இந்த நாளில் நாட்டின் ஆயுதப் படையினரை நினைவு கூறுவதோடு நெஞ்சுரம் கொண்டவர்களையும் நினைவு கூறுகிறோம். நம்மை சுற்றியுள்ள இயற்கை வளங்களை நாம் பாதுகாப்போம் அதன் பிரதிபலனாக இயற்கை நம்மை பாதுகாக்கும்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள் கடலில் மூழ்காமல் இருக்க பனை மரங்களை மக்கள் நடுகிறார்கள். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கின்றன பனை மரங்கள்" என்றார்.