Published on 20/02/2018 | Edited on 20/02/2018

நடிகர் கமல்ஹாசன் நாளை 21.2.2018 -ல் அரசியல் கட்சி தொடங்குகிறார். கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கொள்கைகளை முதலியவற்றை மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கிறார்.
புதிய கட்சியை துவங்குவதால் தனக்கு நன்று அறிமுகமானவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த சில தினங்களாக கலைஞர், நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயு, நாளை கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலுடனான 20 நிமிட தொலைபேசி உரையாடலில், அரசியலின் உண்மையான கதாநாயகன் என்று கமல்ஹாசனை குறிப்பிட்டுள்ளார்.