டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
ரத்தன் டாடாவின் மறைவையொட்டி, மாநிலத்தில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மகாராஷ்டிரா அறிவித்தது. அதுமட்டுமல்லாமல், ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து, மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு ரத்தன் டாடாவின் உடல் தேசிய கொடியால போர்த்தப்பட்டு, அங்கிருந்து தேசிய மையத்துக்கு கொண்டு வந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு, இன்று மாலை ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதன் பிறகு, மும்பை ஓர்லியில் உள்ள மயானத்தில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் இறுதிசடங்குகள் செய்யப்பட்டது.