Skip to main content

'நடுத்தர மக்களின் கார் கனவை நிறைவேற்ற துடித்த ரத்தன் டாடா'- வென்று நின்ற கதை

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
'Ratan Tata who strived to fulfill the car dream of the middle class' - a winning story

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா நேற்று இரவு காலமானார். டாடா குழுமத்தின் தலைவராக 1991 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை ரத்தன் டாடா பதவி வகித்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நாவல் டாடா-சுனு தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ரத்தன் டாடா. டாடா குழுமத்தை நிறுவிய ஜாம்செட்ஜி டாடாவின் கொள்ளு பேரன் தான் ரத்தன் டாடா. பள்ளிபடிப்பை தொடங்கிய வயதிலேயே ரத்தன் டாடாவின் பெற்றோர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். அதனைத் தொடர்ந்து பாட்டியின் கட்டுப்பாட்டில் ரத்தன் டாடா வளர்ந்தார். அமெரிக்காவில் 1962 ஆம் ஆண்டு கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் துறையில் பிஎஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். படிப்பை முடித்த கையோடு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையை ரத்தன் டாடா நிராகரித்தார் தொடர்ந்து. 1962 ஆம் ஆண்டு 'டாடா ஸ்டீல்' நிறுவனத்தில் ஒரு பயிற்சியாளராக ரத்தன் பணியை தொடங்கினார்.

nn

தொடர் கடின உழைப்பின் மூலமாக 1991 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். டாடா குழுமத்தின் வணிகத்தை உலகமயமாக்குதலில் அதிகம் கவனம் செலுத்தினார். தன்னுடைய கனவு திட்டமாக இருந்த 'நானோ கார்' உருவாக்குவதை செயல்படுத்தி காட்டி ஒட்டுமொத்த உலகையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தார். இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களின் கார் கனவை நிறைவேற்ற நானோ கார் பூர்த்தி செய்ய முயன்றது. டிசம்பர் 2012 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வுபெற்றார். 1991 ஆம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்ற போது வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு 2012 அவர் பதவியை விட்டு விலகிய போது 8 லட்சம் கோடியாக இருந்தது தான் சாதனை. 2016 ஆம் ஆண்டு முதல் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா சிறிது காலம் பணியாற்றினார் தொடர்ந்து. டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். அதனால் ஜனவரி 2017 ஆம் ஆண்டு  மீண்டும் ரத்தன் டாடா ஓய்வு பெற்றார்.

tata

பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற ரத்தன் டாடா உடலுக்கு மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்ட் பகுதியில்  தேசிய மைய வளாகத்தில் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணி வரை அவரது உடலானது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொழிலதிபராக மட்டுமல்லாமல் டாடா நிறுவனத்தின் மூலம் கிடைத்த 65 விழுக்காடு தொகையை இந்திய மக்களுக்காக செலவழித்ததோடு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நடத்தி  பேரிடர் நேரங்களில்  உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சார்ந்த செய்திகள்