கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நரேந்திர மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மே 12ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனி மெஜாரிட்டிக்கான இடங்களை பிடிக்கும்.
முதல் மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒவ்வொரு பொது பேரணிக்கு பின்பும் காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கியும், பாரதீய ஜனதா வெற்றிக்கான வாய்ப்பில் முன்னோக்கி செல்லும் நிலையிலும் உள்ளது.
தொங்கு சட்டமன்றத்திற்கு இடமில்லை. கூட்டணி அரசும் நிராகரிக்கப்படும். மக்கள் நிலையான அரசை விரும்புகிறார்கள். சித்தராமையாவின் ஊழல் அரசிடம் இருந்து மக்களை காப்பாற்றும் அரசை அவர்கள் விரும்புகின்றனர் என கூறியுள்ளார்.