ராஜீவ்காந்தியின் பிறந்தநாள்; தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா, ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோரும் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.