மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72,000 வரை வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
ஆனால் இதுஒரு ஏமாற்று வேலை என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில் இது பற்றி இன்று ராஜஸ்தானில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியம். கடந்த 5 வருடங்களாக மோடியின் பாஜக அரசு பணக்காரர்களுக்கு பணத்தை வாரி கொடுத்தது, ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு பணத்தை கொடுப்போம். வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படுவதன் மூலம் வறுமை ஒழிப்பை உறுதிசெய்வோம்.மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் விவசாய கடன் எப்படி தள்ளுபடி செய்யப்பட்டதோ அதுபோல இதனையும் செய்வோம்" என கூறினார்.