மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், இன்றோடு (15 ஆம் தேதி) இருபதாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
இந்தநிலையில் ராகுல் காந்தி, மோடி அரசுக்கு போராடும் விவசாயிகள் காலிஸ்தானிகள் என்றும் பெருமுதலாளிகள் சிறந்த நண்பர்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "மோடி அரசாங்கத்திற்கு கருத்து வேற்றுமை கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். கவலைகொண்ட குடிமக்கள் நகர்ப்புற நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கரோனா தொற்றைப் பரப்புபவர்கள். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தானிகள். பெரு முதலாளிகள் சிறந்த நண்பர்கள்" என விமர்சித்துள்ளார்.