காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, ராஜஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'கிசான் மகா பஞ்சாயத்தில்' கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி இன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, வேளாண் சட்டங்கள் மூலம் பிரதமர் தரும் வாய்ப்புகள் பசி, வேலைவாய்ப்பின்மை, தற்கொலை எனக் கூறினார்.
இதுகுறித்து அவர், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவது வேலையின்மைக்கு வழிவகுக்கும். மக்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தருகிறேன் என்று பிரதமர் கூறுகிறார். ஆம். பசி, வேலையின்மை மற்றும் தற்கொலை ஆகிய வாய்ப்புகளைத் தருகிறார். அவர் விவசாயிகளுடன் பேச விரும்புகிறார். ஆனால், சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை, அவர்கள் பேசமாட்டார்கள்.
விவசாயம் 'பாரத் மாதா'வுக்குச் சொந்தமானது, தொழிலதிபர்களுக்கு அல்ல" எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பேரணியில் ராகுல் காந்தி டிராக்டர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.