Published on 01/12/2018 | Edited on 01/12/2018
![g](http://image.nakkheeran.in/cdn/farfuture/5j7i-PBuz3sbrnIpbeA9nCcCXI_WTA1vM7T2oFUaKoY/1543659356/sites/default/files/inline-images/gdp-in.jpg)
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனும் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் (2018-19) இரண்டாவது காலாண்டில் 7.1 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் 8.1 சதவீதமாக இருந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் சென்ற (2017-18) நிதியாண்டில் இரண்டாவது காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.