Published on 08/06/2022 | Edited on 08/06/2022

ஓடும் பேருந்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பெட்டியா எனும் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பேருந்தில் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிறுமி மயக்க நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பேருந்தை பறிமுதல் செய்ததோடு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.