Skip to main content

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இராஜினாமா!

Published on 18/09/2021 | Edited on 18/09/2021

 

amarinder singh

 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

 

இருப்பினும் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, இன்று (18.09.2021) சட்டமன்றக் குழு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

 

இதற்கிடையே, அமரீந்தர் சிங்கை இராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியதாகவும், அதற்கு, தன்னை பதவி விலகச் சொன்னால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிடுவேன் என அமரீந்தர் சிங் கூறியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்திய அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். மேலும், தனது அமைச்சரவையின் இராஜினாமா கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்