Skip to main content

புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

puducherry fisherman's governor kiranbedi

 

புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான நிவாரண தொகையை வழங்க விடாமல் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருவதாகக் குற்றம் சாற்றிய மீனவர் அமைப்புகள் கடலுக்குச் சென்று கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதையடுத்து நேற்று (25/06/2020) தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்த மீன்வளத்துறை, 'அதில் மஞ்சள் கார்டுகள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு நிவாரண தொகை இல்லை' என்று அறிவிப்பை வெளியிட்டது. 

 

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (26/06/2020) 18- க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி கடற்கரையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்