உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியில், சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
ரேபரேலி தொகுதியில்தான் சோனியா காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு உருதுணையாக இருந்தவர் அவரது மகள் பிரியங்கா. அந்த தொகுதியில் சோனியா காந்திக்காக தெரு தெருவாக பிரசாரம் செய்தார் பிரியங்கா. பலரின் ஆதரவுகளை திரட்டினார். வெற்றிபெற்ற பின்னர், இந்த தொகுதியில் இவர்கள் இருவரும் தலைகாட்டாததை அடுத்து அந்த பகுதி மக்கள் பிரியங்காவை கண்டித்து, பிரியங்கா காணவில்லை என்று நூற்றுக்கும் மேற்பட்ட போஸ்டர்களை அந்த தொகுதியில் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் பிரியங்காவின் படம் வைக்கப்பட்டு, ”பிரியங்காவை காணவில்லை” என்று அச்சிடப்பட்டிருந்தது. கடைசியாக பிரியங்கா இந்த தொகுதிக்கு வந்துவிட்டு சென்றபின் பல சோகமான சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. அது தொடர்பாக மக்களை சந்திககாமல் இருக்கிறார். மக்கலை அலட்சியம் செய்து வருகிறார் என்று அந்த போஸ்டரில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கண்டன போஸ்டரால் காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கோபத்திலும், அதிர்ச்சியிலும் இருக்கின்றனர்.
கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு,வெற்றிபெற்றார். அதிலிருந்து இந்த தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.