''ஒரு அடார் லவ்'' என்ற திரைப்படத்திலிருந்து வெளியான ''மாணிக்க மலராய பூவி'' பாடலின் வீடியோ காட்சியில் கண்ணடித்து பல இளசுகள் மத்தியில் இடம்பிடித்து ஒரே நாளில் புகழ் பெற்ற நடிகை பிரியா வாரியர். இந்த வீடியோ காட்சி வெளியானதில் இருந்து இவர் மீது பல அவதூறு வழக்குகள் குவிந்தது. இந்நிலையில் அவர் யார் மனதையும் புண்படுத்தும்படி நடிக்கவில்லை என தீர்ப்பு வழங்கி அவர்மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
அண்மையில் ''ஒரு அடார் லவ்'' என்ற திரைப்படத்தின் ஒரு வீடியோ பாடல் மற்றும் வெளியானது. அந்த பாடலில் பள்ளி சீருடையில் அந்த படத்தின் நாயகி பிரியா வாரியர் ஒரு மாணவனை பார்த்து கண்ணடிப்பது போன்ற கட்சி இளைஞர்கள் மத்தியில் பெரும் வைரலை பெற்று ஒரே நாளில் பிரபலமானார் பிரியா வாரியர். அதுமட்டுமின்றி ''மாணிக்க மலராய பூவி'' என்ற அந்த பாடல் முஸ்லிம் ஆன்மீக பாடல் மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது என பல வழக்குகள் பிரியா வாரியர் மீது போடப்பட்டிருந்தது.
அவர்மீது போடப்பபட்ட அத்தனை வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பிரியா வாரியர் யார் மனதையும் புண்படுத்தும்படி நடிக்கவில்லை எனக்கூறி தீர்ப்பு வழங்கி எல்லா வழக்குகளையும் ரத்து செய்தனர்.