அதிவேக இணைய சேவையான 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைகற்றை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. 5ஜி அலைகற்றை அதிகளவில் வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனைக் கொண்டு வருவதற்கு முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக, டெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் வரை நடைபெறவுள்ள மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.