Skip to main content

தற்கொலை செய்து கொள்வோம் என போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகள்...கட்சி தலைவர்கள் அதிர்ச்சி!

Published on 06/07/2019 | Edited on 06/07/2019

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை, கால தாமதமின்றி உடனடியாக நியமிக்க கட்சி தலைமையை கேட்டுக்கொண்டார். இருப்பினும் இது வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரை காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி தேர்ந்தெடுக்கவில்லை.

 

 

 

president post resign rahul gandhi, impact in bihar congress workers poster suicide announced

 

 

 

புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாட்னா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று மதியம் 02.00 மணிக்கு ஆஜராக உள்ளதாக ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி, பீகார் மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.

 

president post resign rahul gandhi, impact in bihar congress workers poster suicide announced

 

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த மாநிலத்தில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் ஒரு சில நிர்வாகிகள் ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவில்லை என்றால் வரும் 11ஆம் தேதி பாட்னாவில் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் 12 பேர் போஸ்டர் ஒட்டி உள்ளதால், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்