ஜனாதிபதியுடன், ஜி.கே.வாசன் சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழக மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டே நீட் தேர்வு முறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன், ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.