டெங்கு பாதிப்பு- புதுவை அரசு மருத்துவமனையில்
முதல்வர் நாராயணசாமி ஆய்வு
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு சென்று பார்வையிட்ட முதல்வர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுக்கும் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி,
’’டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை இணைந்து செயல்பட்டு நகர்ப்புறம், கிராமப்புறங்களில் டெங்கு கொசுவை ஒழிக்க எண்ணெய் மருந்து கலந்த கொசு மருந்தை அடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டெங்கு பாதிக்கப்பட்டவர்கள் 40 சதவீதத்துக்கு மேல் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்ட அவர், புதுவையில் டெங்கு கட்டுக்குள் தான் உள்ளது அதை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், சிகிச்சை வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்தார் .
- சுந்தரபாண்டியன்