Skip to main content

5000 கோடி நன்கொடை: அரசியல் கட்சிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய தகவல்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

அரசியல் கட்சிகளுக்கு வங்கி கணக்கு மூலம் நன்கொடை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தேர்தல் பத்திரங்கள். பொதுவாக அரசியல் கட்சிக்களுக்கு நன்கொடைகள் பணமாகவே வழங்கப்பட்டு வந்தன. இதில் கருப்பு பணம் அதிகம் புழங்குகிறது என்பதால் மத்திய அரசு பணமாக நன்கொடை அளிக்க கூடாது என அறிவித்தது.

 

political parties donation details got by rti act

 

 

மேலும் நன்கொடை வழங்க விரும்பும் தொகைக்கு ஏற்ப தேர்தல் பத்திரங்களை வாங்கி, அவற்றை கட்சிகளுக்கு தரலாம். அந்த பத்திரங்களை கட்சிகள் எஸ்.பி.ஐ வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

அந்த வகையில் இதுவரை இந்த திட்டம் மூலம் எவ்வளவு பணம் கட்சிகளுக்கு வழக்கப்பட்டுள்ளன, யாரெல்லாம் வழங்கியிருக்கிறார்கள் என தகவல் கேட்டு மும்பையை சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்தார்.

தற்போது அவருக்கு பதிலளித்துள்ள எஸ்.பி.ஐ, மே 4-ந் தேதி வரை மொத்தம் ரூ.5,029 கோடி மதிப்புள்ள 10,494 தேர்தல் பத்திரங்கள் 9 கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன என்றும், அதில் 10,494 தேர்தல் பத்திரங்களில் 10,388 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.5,011 கோடி என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பணம் வழங்கிய தனிநபர்கள் பற்றிய விபரங்களை தெரிவிக்க முடியாது எனவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்