காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த போது, வெளிப்படைத்தன்மை இல்லாமல், பிரதமர் நிவாரண நிதி கணக்கிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள அவர், " பார்ட்னர் ஆர்கனைசேஷன் அண்ட டோனர்ஸ் இயர் 2005-06, மற்றும் 2007-08 ஆகியவற்றின் விவரங்களைப் பார்த்த போது பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நிதி நன்கொடை அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது நாடு முழுதும் பேரிடர்களைச் சந்திக்கும் மக்களுக்கு உதவும் வகையிலானது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதிலிருந்து குடும்ப அறக்கட்டளையான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
அப்போது பிரதமர் நிதி நிவாரண நிதி வாரியத்தின் தலைவர் யார்? சோனியா காந்தி, ராஜிவ் காந்தி அறக்கட்டளையின் தலைமைப் பதவியிலிருந்தது யார்? சோனியாதான். எந்த வித அறவுணர்வும் இல்லாமல் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இதன் நடைமுறைகள் இருந்துள்ளன. இந்திய மக்கள் தாங்கள் கடினமாகச் சம்பாதித்துச் சேமித்த பணத்தைச் சக மனிதனுக்கு உதவும் நோக்கில் பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கின்றனர். இந்தப் பொதுமக்கள் பணத்தைக் குடும்பம் நடத்தும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிப்பது ஒரு வெட்கக்கேடான மோசடி மட்டுமல்ல, இந்திய மக்களுக்கு ஒரு பெரிய துரோகமாகும். ஒரு குடும்பத்தின் பணப்பசி இந்தத் தேசத்தையே பாதித்துள்ளது. காங்கிரஸின் ஏகாதிபத்திய பரம்பரை சுயலாபக் கொள்ளைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.