ஜூன் 17- ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் முக்கியமாக இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலை வாய்ப்புகளை உருவாக்க தவறி விட்டார் என பிரதமரை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதை உறுதி செய்யும் வகையில் தொழிலாளர் துறை அமைச்சகம் வேலை வாய்ப்பின்மை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்றும், மே 31 ஆம் தேதி வரை இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6.1% விகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று கூடிய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இளைஞர்களின் நலன் மற்றும் கல்வி, புதிய வேலைவாய்ப்புகள் குறித்து பிரதமர் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ததாக செய்திகள் வெளியாகின.
அந்த ஆலோசனையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஊதிய முரண்பாடு மற்றும் தொழிலாளர்களின் சலுகைகளில் வித்தியாசம், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல் உள்ளிட்டவைகளை சீர் செய்து இளைஞர்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்திய தொழிலாளர் சட்டம் 1948-யை திருத்தும் செய்யவும், தொழிலாளர் சட்டத்தில் உள்ள 44 பிரிவுகளை ஒருங்கிணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் முதலில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும், பல புதிய அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.