Skip to main content

காங்கிரஸ் தலைவருக்காக உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்திய பிரதமர் மோடி!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

pm modi in tears

 

மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிவடையும் உறுப்பினர்களுக்குப் பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சி, இன்று (09.02.2021) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

 

காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றோடு முடிவடைகிறது. அவரைப் பற்றி பேசியபோது பிரதமர் மோடி, உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.

 

பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத் குறித்து, "எனக்குப் பல ஆண்டுகளாக குலாம் நபி ஆசாத்தை தெரியும். நாங்கள் ஒன்றாக முதல்வர்களாக இருந்தோம். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக காஷ்மீரில் சிக்கிக்கொண்டபோது ஆசாத் எடுத்த முயற்சிகளையும், பிரணாப் முகர்ஜி எடுத்த முயற்சிகளையும் ஒருபோதும் மறக்க முடியாது. குலாம் நபிஆசாத் தொடர்ந்து அதனைப் பின்தொடர்ந்தார். தனது சொந்தக் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டதைப் போல அவர் கவலைப்பட்டார். 

 

உயர் பதவி வரும், அதிகாரம் வரும். இவற்றை எவ்வாறு கையாள்வது என்பதை குலாம் நபி ஆசாத் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் அவரை ஒரு உண்மையான நண்பராக கருதுகிறேன். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்பவர், அவரது பணிகளை ஈடுசெய்ய சிரமப்படுவர். ஏனெனில் அவர் தனது கட்சியைப் பற்றி மட்டுமல்ல, நாடு மற்றும் நாடாளுமன்ற அவை பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்." எனக் கூறினார்.

 

தனது பேச்சின் நடுவே உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, கண்ணீர் சிந்தினார்.

 

சார்ந்த செய்திகள்