Published on 13/07/2021 | Edited on 13/07/2021

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்துவருகிறது. இருப்பினும் கரோனா மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையொட்டி பல்வேறு மாநிலங்கள் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகிவருகின்றன. இந்நிலையில், வரும் 16ஆம் தேதி பிரதமர் மோடி மாநில முதல்வர்களோடு ஆலோசனை நடத்தவுள்ளார்.
காணொளி வாயிலாக, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்ட்ரா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மாநிலங்களில் நிலவும் கரோனா நிலை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.