Skip to main content

"கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்த்துகள்"- பிரதமர் மோடி..

Published on 28/12/2020 | Edited on 28/12/2020
modi

 

விவசாய விளைபொருட்களை ஏற்றி செல்லும் உழவர் ரயில் சேவை (கிசான் ரயில்) கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.இந்த சேவையின் முதல் ரயில், மகாராஷ்டிராவின் தேவலாலி மற்றும் பீகார் மாநிலத்தின் தனபூர்  இடையே தனது பயணத்தைத்  தொடங்கியது.

 

இந்தநிலையில், இந்த உழவர் ரயில் சேவையின் 100வது ரயிலின் பயணத்தை, மகாராஷ்டிராவில் சங்கோலா மற்றும் மேற்கு வங்கத்தின் ஷாலிமார் இடையே பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். 


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உழவர் ரயில்கள் விவசாயிகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "உழவர் ரயில் விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒரு பெரிய படியாகும். நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகள். கோவிட்19-ன் சவால் இருந்தபோதிலும், உழவர் ரயில் சேவை கடந்த நான்கு மாதங்களில் விரிவடைந்து இப்போது அது தனது  100 வது ரயிலைப் பெற்றுள்ளது. உழவர் ரயில் ஒரு நகரும் குளிர் சேமிப்பு வசதி போன்றது. பழங்கள், காய்கறிகள், பால், மீன் போன்ற அழிந்துபடக்கூடிய பொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்