Skip to main content

அதிர்ஷ்டக்கார ஆட்டோ ஓட்டுநரின் பரிதாப நிலை

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

 

Pity of the lucky auto driver!


கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்டக்கார ஆட்டோ ஓட்டுநர் தற்போது நிம்மதி இழந்து தவிப்பதாக தெரிவித்துள்ளார். 

 

திருவனந்தபுரத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் அணுப் கடன் தொல்லையைத் தீர்க்க மலேசியா நாட்டுக்கு சமையல் வேலைக்கு செல்ல தயாரானார். இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, பம்பர் லாட்டரியை வாங்கியவருக்கு அடித்தது லக்கி ப்ரைஸ் என்பது போல, 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. இதையடுத்து, அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. 

 

வீட்டைக் கட்டி முடித்து விடுவேன், புதிதாக தொழில் தொடங்குவேன், இருக்கும் கடன்களை அடைத்து விடுவேன், உறவினர்களுக்கு உதவுவேன் என்றெல்லாம் ஊடகங்களிடம் தனது உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் ஒரு வாரத்திற்குள் அவரது உற்சாகம் கரைந்து, அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. காரணம் அவருக்கு பரிசாக விழுந்த பணத்தைக் கடனாகக் கேட்டும், மருத்துவச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்குவது என ஒவ்வொரு காரணத்தைக் கூறியபடி, அவரது வீட்டின் முன்பு குவிந்தது தான். இதனால் அந்த நபர் தற்போது வீட்டிலேயே தங்குவதில்லை. 

 

இதில், வேடிக்கை என்னவெனில் திரைப்படம் தயாரிப்பதற்கு கூட அவரிடமே உதவிக் கேட்டு சிலர் வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். இந்த தொந்தரவுகளால் மன நிம்மதியை இழந்திருப்பதாகக் கூறும் அணுப், தனது குழந்தைகளைக் கூட பார்க்க முடியாமல் நள்ளிரவு சமயத்தில் தான் வீட்டிற்கு வருகிறார்.  

 

 

சார்ந்த செய்திகள்