தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி புயலாக மாறினால் அதற்கு வைக்கப்படும் பெயரை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில் புயலாக வலுப்பெறக் கூடும்.
அப்படி புயலாக உருவானால் அதற்கு ‘பைபர்ஜோஸ் புயல்’ எனப் பெயர் வைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.