Published on 12/11/2019 | Edited on 12/11/2019
கேரள முதல்வர் பினராயி விஜயனை மாற்றுத்திறனாளி ஒருவர் சந்தித்து பேரிடர் நிவாரண நிதி அளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலக்காட்டின் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கேரளாவின் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு நிதியளித்தார். ஓவியரான பிரணவ் என்ற அந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பினராயி விஜயனை சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பினராயி விஜயன், " அல்தூரைச் சேர்ந்த ஓவியரான பிரணவ், சி.எம்.டி.ஆர்.எஃப்-க்கு தனது பங்களிப்புகளை ஒப்படைக்க சட்டமன்ற அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். இன்று காலை இந்த நிகழ்வு எனது மனதை தொடுவதாக அமைந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு கேரள அரசாங்கம் அளித்துவரும் ஆதரவு குறித்து பிரணவ் மகிழ்ச்சி தெரிவித்தார்" என கூறியுள்ளார். .