வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்தும் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் பல இடதுசாரி அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.
இந்த போராட்டத்தால் இந்தியாவின் பல பகுதிகளில் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளது. குஜராத்தில் பல இடங்களில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்து எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பீகாரில் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் உஜ்ஜைன் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் அந்த பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியுள்ளனர்.கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.