இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில், அதனை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது.
வரும் நவம்பர் 14- ஆம் தேதி முதல் நவமபர் 29- ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் பாதை யாத்திரையும் செல்வார்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.