Published on 30/09/2021 | Edited on 30/09/2021
கேரள பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கேரளா மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டங்களைக் கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி, முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்புகளில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன் தயாள் உபாத்யா, பால்ராஜ் மதோ உள்ளிட்டோர் தொடர்பான பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘நவீன அரசியல் சிந்தனையில் தேசமும், தேசியமும்’ என்ற தலைப்பில் சாவர்க்கர், கோல்வார்கர், முகமது அலி ஜின்னா, மௌலானா அபுல் கலாம் ஆசாத் ஆகியோரின் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல், 'திராவிட தேசியம்' என்ற பெயரிலான பாடத்தில் தந்தை பெரியாரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.