மக்களின் வளர்ச்சி மட்டுமே உபி அரசின் தாரக மந்திரம்!: யோகி
இந்த நாட்டில் யாருக்கும் விஐபி அந்தஸ்துகள் கிடையாது. ஜனநாயகத்தில் பாகுபாடுகள் கிடையாது என சஹரன்பூர் பகுதியில் பொதுமக்களிடையே உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

உபி மாநிலம் சஹரன்பூரில் பொதுமக்களைச் சந்திக்கச் சென்ற யோகி, ‘உத்தரப்பிரதேசத்தில் வெறும் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே மின்வசதி இருந்தது யாவரும் அறிந்ததே. இந்த ஜனநாயக நாட்டில் யாரும் விஐபி-க்கள் இல்லை. அதனால், பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. முதல்வர் தங்கியிருக்கும் இடத்திற்கு மட்டும் மின்வசதி கொடுக்கப்படக்கூடாது. ஏனெனில், அனைத்து மக்களுக்குமான வளர்ச்சிதான் நம் அரசின் இலக்கு எனப் பேசினார்.
மேலும், ‘இந்த மாநிலத்தில் காவல்நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றைக் கொண்டாட ஒருவர் ரூ.5லட்சம் கொடுத்தார். அந்தப் பணத்தை மருத்துவத்துறைக்குக் கொடுத்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்’ என முன்னாள் உபி முதல்வர் அகிலேஷ் யாதவை’ தாக்கிப்பேசியுள்ளார்.
இந்த அரசு சாதாரண, விவசாய மக்களுக்கான அரசு. இந்த மாநிலத்தில் பாகுபாடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் விவசாயக்கடனை தள்ளுபடி செய்துள்ளோம். சாதி, மத பாகுபாடுகளும், அதுசார்ந்த பிரச்சனைகளும் இந்த மாநிலத்தில் அறவே கிடையாது. மக்களின் வளர்ச்சி மட்டுமே இந்த அரசின் தாரக மந்திரம் எனவும் யோகி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
- ச.ப.மதிவாணன்