17- வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 17- ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர், அதனைத் தொடர்ந்து 2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதே போல் பல முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகார குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.