Skip to main content

”ஒவைஷி பாஜகவுக்கு உதவுகிறார்..”- காங்கிரஸ் கண்டனம்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
owaisi

 


ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அதில் சத்தீஸ்கர் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. மேலும் டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானா தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸும் பல திட்டங்களை வகுத்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே வெற்றிபெற்ற தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியும் இவர்களுடன் போட்டிப்போட்டே வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது. 


 

நேற்று நிர்மல் பகுதியில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதின் ஒவைஷி,” இந்த பிரச்சாரத்தை நடத்த வேண்டாம் என்று காங்கிரஸ் சார்பில் எனக்கு 25 லட்சம் விலை பேசப்பட்டது. இதற்கு மேல் அவர்களின் அகந்தையை நிரூபிக்க ஆதாரம் தேவையில்லை. என்னை விலை வாங்கவே முடியாது. அவர்கள் நினைக்கின்ற ஆள் நான் இல்லை” என்றார். அதேபோல இந்த பிரச்சாரத்தில் பாஜகவை பற்றியும் விமர்சித்தார். இந்த இரு தேசிய கட்சிகளுக்கும் எதிரானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

இந்நிலையில், காங்கிரஸ் இதை வன்மையாக கண்டித்துள்ளது. ”ஒவைஷி பாஜகவுக்கு உதவ இவ்வாறு பேசுகிறார்” என்று நேற்று காங்கிரஸ் மீது வைத்துள்ள குற்றச்சாட்டிருக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அலெக்ஸாண்டரை தோற்கடித்த சந்திரகுப்தா - வரலாற்றை மாற்றிய யோகி ஆதித்யநாத்; விமர்சித்த ஒவைசி!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

 

yogi aditynath

 

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "சந்திரகுப்த மௌரியரின் பாரம்பரியம் சிதைக்கப்பட்டது. அலெக்ஸாண்டரை தோற்கடித்ததற்கான பெருமை அவருக்கு வழங்கப்படவில்லை. வரலாறு எப்படி திரிக்கப்படுகிறது! வரலாறு சந்திரகுப்த மௌரியரை ‘தி கிரேட்’ என்று கூறவில்லை. அது யாரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது? சந்திரகுப்தரிடம் தோற்றவரை ‘தி கிரேட்’ என அழைக்கிறது. அலெக்ஸாண்டரை ‘தி கிரேட்’ என அழைக்கிறார்கள். தேசம் ஏமாற்றப்பட்டது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இதுகுறித்து மௌனம் சாதிக்கின்றனர்" என தெரிவித்தார்.

 

சந்திர குப்தர் ஆட்சிக்கு வந்த ஆண்டு எது என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. ஆனால் பொதுவாக கி.மு. 323இல் அலெக்ஸாண்டர் இறந்ததற்குப் பிறகு, கிமு 321இல்தான் சந்திரகுப்தர் ஆட்சிக்கு வந்ததாக கருதப்படுகிறது. அதேநேரத்தில் அலெக்ஸாண்டரும், சந்திரகுப்தரும் போரில் சந்தித்துக்கொண்டதற்கான எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்தச் சூழலில் யோகி ஆதித்யநாத், அலெக்ஸாண்டரை சந்திரகுப்தர் தோற்கடித்ததாக கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

 

இந்தநிலையில், யோகி ஆதித்யநாத்தின் கருத்தை அசாதுதீன் ஒவைசியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்துத்துவா ஒரு போலி வரலாற்று தொழிற்சாலை. சந்திரகுப்தரும் அலெக்சாண்டரும் போரில் சந்தித்ததில்லை. நமக்கு நல்ல பொதுக் கல்வி முறை ஏன் தேவை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. நல்ல பள்ளிகள் இல்லாத நிலையில், வசதிக்கேற்ப 'பாபா-லோக்' உண்மைகளை உருவாக்குகிறார்.  பாபா கல்வியை மதிப்பதில்லை என்பதை இது காட்டுகிறது" என கூறியுள்ளார்.

 

 

Next Story

“கத்துங்க, கத்துங்க நல்லா கத்துங்க” பாஜகவை கதறவிட்ட ஓவைஸி!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான ஓவைஸி உறுதிமொழி ஏற்கவந்தபோது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்றும் வந்தே மாதரம் என்றும் கூச்சலிட்டனர்.

 

ovaisi



உறுதிமொழி ஏற்கும் இடத்துக்கு வந்தபிறகும்கூட அவர்கள் கத்திக்கொண்டே இருந்தனர். ஓவைஸியும் பதிலுக்கு நல்லா கத்துங்க என்பதுபோல சைகை செய்தார். பிறகு சபை காவலர்கள் அமைதிப்படுத்தினார்கள்.

அதன்பிறகு உறுதிமொழி ஏற்ற ஓவைஸி, முடிவாக, ஜெய் பீம், ஜெய் பீம், தக்பீர் அல்லாஹ் ஹு அக்பர், ஜெய் ஹிந்த் என்று முழக்கமிட்டார்.

அவர் இப்படி சொன்னவுடன் பாஜகவினர் பார் மாதாக்கீ ஜெய் என்று குரல் எழுப்பினர். பின்னர் சபைக்கு வெளியே பேசிய ஓவைஸி, என்னைப் பார்த்ததும்தான் அவர்களுக்கு அந்த கோஷம் நினைவுக்கு வருகிறது என்றால் நல்லதுதான். முஸாபர்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததையும் நினைத்துக் கொண்டால் ரொம்ப நல்லது. குறிப்பாக இந்திய அரசியல் சட்டத்தை நினைவில் கொள்வது நல்லது என்று கிண்டலாக கூறினார்.