கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்கள், இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகளை அறிவித்தது.
இந்நிலையில், பருவமழை காரணமாக தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். அதனால் திருப்பறங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஓ.பி. ராவத். ஆனால், கர்நாடகாவில் நடக்க இருந்த மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதிகள் அறிவித்தது தேர்தல் ஆணையம்.
தற்போது தமிழகத்தில் நடக்க இருக்கும் இரண்டு இடைத்தேர்தலுக்கான தேதிகள் ஏன் அறிவிக்கப்படவில்லை என்று ஒபி ராவத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணம் இல்லை. திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான தேர்தல் வழக்கு முடிந்தால் தான் தொகுதி காலியானதாக அறிவிக்க முடியும் என்றார். மேலும் இந்த தொகுதி மீது தொடரப்பட்ட வழக்கு 23ம் தேதிக்கு நிறைவடைந்தால் 2 தொகுதிக்களுக்கும் ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.