தீப்பிடித்து எரிந்த நிலையில், 1,441 மின்சார இருசக்கர வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. குறிப்பாக, வேலூரில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததில், ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை, மகளும் உயிரிழந்தன. அதேபோல், புனேவில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஓலா மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சூழ்நிலையில் 1,441 மின்சார இருசக்கர வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. திரும்பப் பெறப்படும் வாகனங்கள் அனைத்தும் மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒகினாவா 3,000 வாகனங்களையும், பியூர் 2,000 வாகனங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.