ஒடிசா மாநிலம், சிம்லிபால் வனவிலங்கு காப்பகப் பகுதி, கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் வனவிலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் ஒடிசா அரசு கூறியது. ஆனால், இந்த தீயினால் பல்வேறு உயிரினங்கள் பலியாகிவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
இந்த காட்டுத்தீ தொடர்பாக வனத்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். விலங்குகளை வேட்டையாட அவ்விருவரும் பற்ற வைத்த தீயே காட்டுத்தீயாக மாறியுள்ளது என வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும், இந்த காட்டுத்தீயை அணைக்க ஒடிசா வனத்துறை 21 குழுக்களை அமைத்துள்ளது.
இந்தநிலையில், காட்டுத்தீயால் அங்கிருக்கும் விலங்குகள் அருகிலிருக்கும் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளன. அவை வாழ்விடம் தேடி ஊருக்குள் வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சிம்லிபால் வனவிலங்கு காப்பகத்தில், புலிகள் காப்பகமும் அமைந்துள்ளது. புலிகள் காப்பகத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.