Published on 22/06/2018 | Edited on 22/06/2018

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சென்னை ஐஐடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
தமிழ்நாட்டில் இனி பின்வரும் காலங்களில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தமிழ்நாட்டிலேயே அதுவும் தங்களது மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அதேபோல் வினாத்தாள் தயாரிக்க தமிழகத்திலிருந்து நல்ல தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களை தேர்வு செய்யவேண்டும். நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் (STATE BOARD) இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் எனவும் கூறியுள்ளார்.