Skip to main content

மிஸ்டு கால் மூலம் எல்பிஜி இணைப்பு பெறும் வசதி அறிமுகம்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

indian oil

 

எல்பிஜி இணைப்பை மிஸ்டு கால் மூலம் பெறும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, புதிய எல்பிஜி இணைப்பை பெறலாம். அதேபோல் இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் எரிவாயு எல்பிஜி சிலிண்டரை முன்பதிவும் செய்யலாம்.

 

அதேபோல் வாடிக்கையாளர்கள் இரட்டை எரிவாயு இணைப்பு பெறும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏற்கனவே எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள், இரட்டை சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற முடியும்.

 

இந்த மிஸ்டு கால் மூலம் எல்பிஜி இணைப்பு பெறும் வசதியைத் தொடங்கிவைத்த எஸ்.எம். வைத்யா, இந்தத் திட்டம் முதியவர்களுக்கும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பயனளிக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து; அலறியடித்து ஓடிய மக்கள்

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Boiler explosion accident in Indian Oil Company in chennai

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு வேலை செய்து வருகிறார்கள்.  இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று (27-12-23)இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பாய்லர் வெடித்ததை அடுத்து நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த விபத்தால், அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

இதனையடுத்து, அப்பகுதியில் தீப்பற்றி எரிந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில், பாதிப்புள்ளாகிய ஊழியர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  இதில், சரவணா மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சரவணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பகுதியை சுற்றிலும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால், திடீரென்று எண்ணெய் கசிவால் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வருடத்திற்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Two free cylinders per year for people..

 

குஜராத்தில் மக்களுக்கு இலவசமாக இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

குஜராத்தில் விரைவில் சட்டபேரவைத் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீட்டு வகானி தெரிவித்தார். 

 

தீபாவளி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் படி பிரதமரின் உத்வாலா யோஜனா  திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் 38 லட்சம் மக்கள் ஓராண்டுக்கு இரண்டு சிலிண்டர்களை பெற்று பயனடைவார்கள் என கூறப்படுகிறது. சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி மீதான வாட் வரியில் 10% குறைக்கப்படும் எனவும் குஜராத் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து அமைச்சர் ஜீட்டு வகானி கூறுகையில் மாநிலத்தில் உள்ள குடும்பத் தலைவிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்காக 650 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.