உலக பட்டினி குறியீட்டுப் பட்டியல் அறிவிப்பு: மோசமான நிலையில் இந்தியா!
சமீபத்ததில் வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினி குறியீட்டுப் பட்டியிலில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டு உலகளாவிய நாடுகளில் உள்ள பட்டினி குறியீடு தொடர்பான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பட்டியலை அது வெளியிட்டுள்ளது.
119 நாடுகள் அடங்கிய இந்தப் பட்டியலில், இந்தியா 100-வது இடத்தை வகிப்பதாகவும், தெற்காசிய நாடுகளில் இந்தியாவின் நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிய நாடுகளான சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கி இருப்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. இந்தப் பட்டியலானது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள குழந்தைகளுக்கு கிடைக்கும் முறையான ஊட்டச்சத்து, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட காரணிகளை மையமாக வைத்து தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 97ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு மூன்று இடங்கள் இறங்கி 100ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் பாதிக்கும் மேல் மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்லது அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், இந்தப் பட்டியலை தயார்செய்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.