Published on 25/03/2020 | Edited on 25/03/2020
சீனாவில் வுஹான் மாகணத்தில் கரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கரோனாவுக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அதிவேகமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.