Skip to main content

பேஸ்புக் கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை - மத்திய அரசு

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

சமூக வலைத்தள கணக்கோடு ஆதாரை இணைக்கும் திட்டம் தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் ஆகிய தனிநபர் சமூக வலைத்தள கணக்கோடு ஆதாரை இணைக்க வேண்டும் என சமீபத்தில் அஸ்வினி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
 

j




அதன் பின்பு அந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டதை தொடர்ந்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இது குறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்த நிலையில், தற்போது தனி நபர் சமூக வலைத்தள கணக்கோடு ஆதாரை இணைக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக மொபைல் எண், வங்கி எண், பான் எண் என அனைத்திற்கும் ஆதார் இணைப்பு முக்கியம் என மத்திய அரசு கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்