Published on 13/04/2022 | Edited on 13/04/2022

தமிழக தேர்வுத்துறையின் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தந்து வடமாநிலத்தவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது. சுமார் 200 வடமாநிலத்தவர்கள் அஞ்சல் ஊழியர் பணி, சி.ஆர்.பி.எப், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர். யுபிஎஸ்சி கொடுத்த சரிபார்ப்பு நடவடிக்கையில் போலி சான்றிதழ் தந்ததை அரசு தேர்வு துறை இதனை உறுதி செய்தது. போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது போலீசில் புகார் தர அரசு தேர்வுகள் துறை பரிந்துரைத்துள்ளது.