'ஸைடஸ்கெடிலா' நிறுவனத்தின் 'ZyCov-D' கொரோனா தடுப்பூசியை அவரச கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம். உலகிலேயே டி.என்.ஏ. அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும். 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 'ZyCov-D' கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்தலாம் என மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'ZyCov-D' கொரோனா தடுப்பூசி ஒப்புதலைத் தொடர்ந்து, இந்தியாவில் மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நிறுவனத்தின் மூலம் 'ZyCov-D' கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு தடுப்பூசி சப்ளை செய்யப்படும் என்பது குறித்து தகவல் விரைவில் வெளியாகும் என்று தகவல் கூறுகின்றன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது.