உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கப்படும் என்ற சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்தபோது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உ.பி. சட்டப்பேரவையில் புதிய சட்டத்தை அமல்ப்படுத்தினார். அந்த சட்டத்தின்படி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களுக்கு அரசு செலவில் பங்களா வழங்கப்படும்.
இந்த சட்டத்தை எதிர்த்து லோக் பரிஹாரி என்ற என்.ஜி.ஓ. அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் முதல்வர் அரசு பதவியில் இல்லாதவர்கள். அதனால் அவர்களுக்கு அரசு பங்களா வழங்குவது முறையாகாது. அதன்படி, உத்தரப்பிரதேசம் மாநில அமைச்சர்கள் அரசியலைமைப்புச் சட்டம் 4(3), 2016 என்பது சட்டவிதிகளுக்கு எதிரானது. எனவே, அந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளிக்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.