பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்களை தடை செய்யும் யோசனை மத்திய அரசுக்கு இல்லை என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு விரைவில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கக் கூடிய கார்களுக்கு மத்திய அரசு தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வதந்திக்கு உற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதின் கட்கரி இதனை தெரிவித்துள்ளார். வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "ஆட்டோமொபைல் துறை நாட்டிற்கு அளித்து வரும் பங்களிப்பை அரசு நன்கு அறிந்துள்ளது. இந்த துறை ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருகிறது. அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் ஆட்டோமொபைல் துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய ஆட்டோமொபைல் துறை, சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் செயல்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.