ஒடிஷாவில் நடைபெற்ற அஸ்ட்ரா ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது. வானில் இருக்கும் இலக்கை போர் விமானம் மூலம் குறி வைத்து தாக்கும் அஸ்ட்ரா ஏவுகணையின் சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது. ஒடிஷாவில் இருக்கும் பாலசோர் பகுதியில் விமானப்படைக்கு சொந்தமான இடத்தில் நேற்று நடந்த சோதனையில், எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்ட்ரா ஏவுகணை ஏவப்பட்டதும், வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை இந்த சோதனை முயற்சி நடைபெற்றதாகவும், அதில் அனைத்திலும் வெற்றியை கண்டிருப்பதாகவும், மேலும் இந்த சோதனை 20 முறை வரை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அஸ்ட்ரா ஏவுகணை சோதனை முயற்சி வெற்றிகரமான முடிவை எட்டியுள்ளதால் விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பராட்டை தெரிவித்துள்ளார்.
Published on 27/09/2018 | Edited on 27/09/2018