Published on 20/09/2019 | Edited on 20/09/2019
இந்திய பொருளாதாரத்தில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரத்தை சீராக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை வெளியிட்ட ஒரு அறிவிப்பிற்கு பின்னர் இந்திய பங்குசந்தை மிகப்பெரிய உயர்வை சந்தித்துள்ளது. இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் எனவும், தொழில் நிறுவனங்களுக்கான விதிக்கப்பட்டு வந்த கார்பரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்தார். பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான இந்த அறிவிப்பால் இந்திய பங்குசந்தை மதிப்பு உயர்வை சந்தித்து வருகிறது.