Published on 16/04/2019 | Edited on 16/04/2019
இந்தியாவிலேயே முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ஏவுகணை கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சோதிக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பத்தில் பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பகல் 11.44 மணிக்கு நிர்பய் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின் சந்திப்பூரில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.