2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதையடுத்து மீதம் உள்ள அக்ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா நான்கு குற்றவாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனையை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த தேதிக்கு முன்னதாக குற்றவாளிகள் கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேரின் கருணை மனுவும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.